வியாழன், 26 செப்டம்பர், 2019

முருகர் கவசம்கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஷண்முக கவசம் வரிசையில் இன்று இணையத்தில் தேடியதில் புதிதாக முருகர் கவசம் என்று ஒன்று கிடைத்தது. இதனை கூடலூர் இருளப்ப செட்டியார் இயற்றியுள்ளார். இதில் சில பகுதிகள் காகித கிழிசலில் இருப்பதால், என்ன வரிகள் என்று முழுமையாக தெரியவில்லை. தற்போது தேடியதுவரை வேறு பதிப்போ அல்லது புத்தகமோ இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை முருகனருளினால் வரும் காலங்களில் பகிர்கிறேன்.

இணைப்பு: முருகர் கவசம்

புதன், 25 செப்டம்பர், 2019

வாலை கும்மி

சித்தர்கள் வணங்கிய, குழந்தையென கொஞ்சிய, அருள் பொழியும் வாலை பெண்ணின் கும்மி பாட்டு. சிலர் இவளை பாலா எனவும், சிலர் இவளே திரிபுர சுந்தரி எனவும் அன்னை மனோன்மணியின் பிள்ளை பருவம் எனவும் கூறுகின்றனர். கேட்பவருக்கு கேட்பவற்றை அள்ளி வழங்கும் குழந்தை இவள்.

வாலை பெண்

இணையத்தில் கிடைத்த சித்தர் மகான் கொங்கணர் எழுதியதாக கிடைத்த "வாலை கும்மி"  என்னும் நூலையும், அதன் பாடலையும் இணைப்பில் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: இணைப்பில் உள்ள அனைத்தின் முழு உரிமையும் ஆசிரியருக்கே.

புத்தகம் 1: வாலை கும்மி

புதன், 18 செப்டம்பர், 2019

முருகவேள் பன்னிரு திருமுறை - மின்னூல்

தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை
தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை


வணக்கம்,

ஏற்கனவே முருகவேள் பன்னிரு திருமுறை பற்றி பதிவிட்டிருந்தேன், பல இடங்களில் தேடியும் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த புத்தகம் கிடைக்கவில்லை. தற்செயலாக இணையத்தில் தேடியபொழுது தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை அவர்கள் உரையெழுத்திய புத்தகங்கள் மின் நூலக கிடைத்தது, அதுவும் இரு வேறு பதிப்பகத்தார் பதிப்பில். இதனை பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

பதிப்பாளர்: ஸ்ரீ மதி மீனாட்சி கல்யாண சுந்தரம்
ஆண்டு: 1952


பதிப்பாளர்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
ஆண்டு: 1992 


புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

புதன், 4 செப்டம்பர், 2019

கந்தர் சஷ்டி கவசம் - விளக்கம்

மிகவும் புகழ்பெற்ற பரிச்சியமான ஸ்ரீ தேவராய சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் சஷ்டி கவசத்தினுடைய பொருள் பெரும்பாலும் எளிதாக விளங்கினாலும், சில வார்த்தைகளின் பொருள் புரிவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. அதன் பொருட்டு இணையத்தில் தேடியதில் ஒரு புத்தகம் கிடைத்தது. அதன் பெயர் கந்தர் சஷ்டி கவசம் - மூலமும் மெய்ப்பொருள் விளக்க விருத்தி உரையும் ஆசிரியர் திரு. அமிர்தம் சுந்தரநாத பிள்ளை.

இதனை பின்வரும் இணைப்பில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.


புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.